fbpx

உஷார்…! இது அனைத்தும் கட்டாயம்…! இல்லை என்றால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும்…! முழு விவரம் உள்ளே…!

ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்திய தர நிர்ணய ஆணையத்தின், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழுவினர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் உள்ள நார்த் ஸ்டார் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ​​இந்திய தர நிர்ணய அமைவன சட்டத்தின் ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், மொத்தம் 48 பொம்மைகள் (47 மின்சாரம் அல்லாத பொம்மைகள், 1 மின்சார பொம்மை) பறிமுதல் செய்யப்பட்டன. குற்றத்தின் முதல் மீறலுக்கு பிஐஎஸ் சட்டம், 2016 இன் பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000-திற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

பொது மக்கள், எவரேனும் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது தெரிந்தால் , பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo2@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல்களை தெரிவிப்பவர்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். 7011775932 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Vignesh

Next Post

மக்களே...! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!

Sun Jan 22 , 2023
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை […]

You May Like