அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ, புலி வாலை பிடித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லூர் ராஜூ. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். இவர் 2011இல் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 2016இல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து, 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ அவரது குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு புலி வாலை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதோடு இல்லாமல் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும் டிரோல் செய்தும் வருகின்றனர்.