fbpx

செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு..!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

மாநில அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 17 சதவீதம் சம்பளம் உயர்த்தி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். 7-வது ஊதியக் குழு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசு ஊழியர் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து முதல்வர் அறிவித்துள்ளார். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு, முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களின் 2 முக்கிய கோரிக்கைகளை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை போராட்டத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 7-வது ஊதியக் குழு நியமிக்கப்பட்டு, இடைக்கால நிவாரணமாக 17 சதவீத ஊதிய உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார். இதற்கிடையே, மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர் சி.எஸ். ஷடாக்ஷரி கூறுகையில், 7வது ஊதியக் குழு மற்றும் என்பிஎஸ் மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், மாநில அரசு ஊழியர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உத்தரவு வரும் வரை காத்திருப்போம், மாநில அரசு ஊழியர்களின் இரு கோரிக்கைகள் மீதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

Chella

Next Post

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை……! 9 வருட போராட்டத்திற்கு பின் கிடைத்த நீதி…..!

Thu Mar 2 , 2023
கடந்த 2014ஆம் வருடம் திருப்பூரில் தங்கி இருந்து டைலராக வேலையை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் 8 வயது மகளை அண்டை வீட்டில் வசித்து வந்த தண்டாயுதம் என்ற கண்ணன் உள்ளிட்ட ஒருசிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். […]
தம்பியுடன் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமி..!! நடுரோட்டில் இளைஞர் செய்த மோசமான காரியம்..!!

You May Like