fbpx

செம குட் நியூஸ்..!! பெண்கள், திருநங்கைகள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்..!! சட்டப்பேரவையில் அறிவிப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அறிவிப்புகளை அத்துறைகளின் அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டார்.

இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆயிரம் பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சத்தில் வழங்கப்படும். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களுக்கு ரூ.29.65 லட்சத்தில் மடிக்கணிகள் வழங்கப்படும்.

தொழிலாளர் கல்வி நிலையத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் கணினி தொடர்பான வசதிகள் மேம்படுத்தப்படும். புதியதாக வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற தொழில் வாய்ப்புகள் குறித்து தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பப்படும். 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள வகுப்பறைகளில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வசதி ரூ.10.11 லட்சத்தில் ஏற்படுத்தி தரப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழில் திறனை மேம்படுத்த 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வசதிகள் செய்துதரப்படும். தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் நவீன தொழில் நுட்பங்களில் குறுகியகால பயிற்சி அளிக்கப்படும். தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்தார்.

Read More : கண் திருஷ்டியை ஓட ஓட விரட்ட வைக்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்.? எப்படி செய்யலாம்.!?

English Summary

Minister of Labor Welfare and Skill Development Department CV Ganesan released the announcements in the Tamil Nadu Legislative Assembly.

Chella

Next Post

கள்ளச்சாராய மரணங்கள்..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் கட்சி செய்யப்போகும் உதவி..!! என்ன தெரியுமா..?

Sat Jun 22 , 2024
While 55 people have died due to drinking liquor in Kallakurichi, more than 100 people are undergoing intensive treatment.

You May Like