நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வம் ஆன ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவானது இன்று (டிசம்பர் 27) கொண்டாடப்படுகிறது. இங்குள்ள 8 கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பண்டிகையன்று விரதம் இருந்து பாதயாத்திரை செல்வார்கள். சிறப்பு மிக்க இந்த விழாவானது இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 27) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் உட்பட அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக 2024 ஜனவரி 6ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.