fbpx

செம ரொமான்ஸ் இருக்கு!… 20 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் ஜோடி சேரும் அபிராமி!

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்துள்ளனர். இப்படத்திற்கான டைட்டில் அறிவிப்பு வீடியோ கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த மிரட்டலான வீடியோ ரசிகர்கள் இடையில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கமல் நடிப்பில் கடைசியாக ‘விக்ரம்’ படம் வெளியாகி வேறலெவல் ஹிட்டடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பிக்பாஸ் என படு பிசியாக இயங்கி வருகிறார். விக்ரம் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல். கொரோனாவிற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தின் ஷுட்டிங் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். கமல், மணிரத்னம் காம்போவில் வெளியான ‘நாயகன்’ படம் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையில் மாஸ்டர் பீஸாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைடுத்து தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் இடையில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இப்படத்தின் ‘தக் லைஃப்’ டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை அபிராமி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் ‘விருமாண்டி’ படத்தின் மூலமாக பிரபலமானவர் அபிராமி. பல படங்களில் நடித்திருந்தாலும் ‘விருமாண்டி’ அபிராமிக்கு பெரும் புகழை தந்தது. இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தவர், தற்போது மீண்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘விருமாண்டி’ படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைஃப்’ மூலமாக கமலுடன் இணைந்துள்ளார் அபிராமி. இதனை அவரே உறுதிப்படுத்தவும் செய்துள்ளார். ஜனவரியில் இதன் படப்பிடிப்பிலும் அவர் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ‘தக் லைஃப்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!

Fri Nov 24 , 2023
நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய வழக்கில், முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் பேசுபொருளானதை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும் இந்த விவகாரம் குறித்து நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜாராகி தன்னுடைய விளக்கத்தையும் தெரிவித்திருந்தார் மன்சூர் அலிகான். மேலும் இந்த […]

You May Like