ஐடி சேவை துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மத்தியில் அக்சென்சர் முதல் நிறுவனமாக தனது வருவாய் கணிப்பை வெளியிட்டது மட்டும் அல்லாமல் செலவுகளை குறைக்க 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அதாவது, அக்சென்சர் நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் டெக் சேவைகள் மீதான செலவின குறைப்புகள் குறித்த எச்சரிக்கை கணிப்புகள் மூலம் அக்சென்சர் நிறுவனம் வியாழன் அன்று அதன் வருடாந்திர வருவாய் வளர்ச்சி மற்றும் இலாப கணிப்புகளை குறைத்துள்ளது.
அக்சென்சர் நிறுவனம் தற்போது ஆண்டு வருவாய் வளர்ச்சியை 8% முதல் 10% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. முன்பு இதன் அளவீட்டை 8% முதல் 11% ஆக நிர்ணயம் செய்திருந்தது. அமெரிக்காவில் ஒரு பக்கம் வங்கிகளின் நிதி நிலை மோசமாகி வருகிறது. மற்றொரு புறம் பெரிய டெக் நிறுவனங்களின் 2-வது ரவுண்ட் பணிநீக்கம், இதற்கிடையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது பணபுழக்கத்தை கூடுதலாக கட்டுப்பாடுத்தும், புதிய கடன்களின் அளவீட்டை குறைக்கும்.