fbpx

கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட்..!! மணப்பெண்ணின் தங்கையை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை..!!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான திருமண வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாப்பிள்ளை ராஜேஷ், அக்காவை திருமணம் செய்துக் கொள்ள வந்திருந்தார். திருமண ஊர்வலத்துடன் வந்த மணமகன் தனது வருங்கால மைத்துனியை மணந்தார். இந்த திருமணம் மஞ்சியில் உள்ள பபௌலி கிராமத்தில் நடைபெற்றது. அங்கு மணமகன் மற்றும் மணமகள் தரப்புக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீசார், மணப்பெண்ணின் தங்கையுடன் மணமகன் ராஜேஷை சேர்த்து வைத்து மணமக்கள் ஊர்வலத்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமாரின் திருமண ஊர்வலம் பபௌலி கிராமத்தை அடைந்தது. பின் மணமகள் ரிங்கு குமாரியின் தந்தை ராமு அவரது வீட்டு வாசலில் ஊர்வலத்தை நடத்தினார். சுமார் 11 மணியளவில் மணப்பெண்ணின் தங்கை புதுல் குமாரி, ரகசியமாக கூரையின் மீது ஏறி மாப்பிள்ளை ராஜேஷை அழைத்து, நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, மணமகன் ராஜேஷ் அவசரமாக தனது குடும்பத்தினரையும், உறவினர்களையும் அழைத்து பேசியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து மாஞ்சி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார், மணமகன் ராஜேஷிடம் விசாரித்தனர். ரிங்குவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பே தனக்கு அவரது தங்கை புதுல் நெருக்கம் என இரு குடும்பத்தாரிடம் கூறினார் ராஜேஷ். சாப்ராவில் உள்ள கல்லூரியில் இடைநிலைத் தேர்வை முடித்த புதுல், அடிக்கடி ஊருக்குச் சென்று அங்கு ராஜேஷை சந்தித்து வந்துள்ளார். அப்போது, இருவரும் ஒருவரையொருவர் காதலித்திருக்கின்றனர்.

காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு ரிங்குவுடன் ராஜேஷுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியடைந்த புதுல், திருமணத்தை நிறுத்துவது அல்லது தற்கொலை செய்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். பின்னர், மணமகளும் தனது தங்கை புதுல் குமாரியுடன் மணமகன் ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்து நடையை கட்டினார் மாப்பிள்ளை ராஜேஷ்.

Chella

Next Post

கட்டுக்குள் வராத நிலைமை..!! கண்டவுடன் சுட உத்தரவு..!! மணிப்பூர் ஆளுநர் அதிரடி..!! பீதியில் பொதுமக்கள்..!!

Fri May 5 , 2023
மணிப்பூரில் பழங்குடியின மக்களும், மெய்தி என்ற சமூக மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மெய்தி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடியினர் என்று சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்குப் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மெய்தி சமூகத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் சுராசந்த்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஒற்றுமைப் பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது […]

You May Like