fbpx

Election 2024 | இது புதுசா இருக்கே.!! “அண்ணாமலை என்னுடைய ரகசிய உளவாளி” – மதுரை பிரச்சாரத்தில் சீமான் பரபரப்பு பேச்சு.!!

Election: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்காக தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்றாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்தவர் சீமான். இவர் நாம் தமிழர் என்ற கட்சியை நிறுவி தமிழ் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனியாக களம் கண்டு நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது. மேலும் ஒவ்வொரு தேர்தல்களிலும் 50 சதவீதம் ஆண் வேட்பாளர்கள் 50 சதவீதம் பெண் வேட்பாளர்கள் என சம உரிமையையும் நாம் தமிழர் கட்சி கடைபிடித்து வருகிறது.

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில்(Election) போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்து வருகிறார் சீமான். மதுரையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான சத்திய பிரியாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய சீமான் பிஜேபி தான் தன்னுடைய பி டீம் என குறிப்பிட்டார். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது ஸ்லீப்பர் செல் என சீமான் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணாமலையை பாரதிய ஜனதா கட்சிக்குள் நான்தான் அனுப்பி வைத்தேன் எனக் கூறிய சீமான் எனக்காக பல லட்சக்கணக்கான தம்பிகள் வெளியே வேலை செய்கிறார்கள். ஒரே ஒரு தம்பி அண்ணாமலை மட்டும் பாஜகவில் இருந்து கொண்டு நாம் தமிழருக்காக வேலை செய்கிறார். அவரும் நானும் தமிழர்கள். எங்களுக்குள் ஓடுவது தமிழ் ரத்தம் எனக் கூறினார். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போன்ற ஒரு நடிகரை தான் பார்த்ததில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். எனினும் அவரது நடிப்பு தமிழகத்தில் எடுபடாது எனக் கூறிய சீமான் நாங்கள் சிவாஜியிடம் நடிப்பு பயின்றவர்கள் அதனால் மோடியின் நடிப்பு இங்கு செல்லாது என தெரிவித்துள்ளார்.

Read More: IPL 2024| தல தரிசனம்.!! எம்எஸ் தோனிக்கு கையில் கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை காட்டிய ரசிகர்.!! வைரல் வீடியோ.!!

Next Post

குட் நியூஸ்...! ரயில் நிலையங்களில் UPI மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி...! இந்திய ரயில்வே அறிவிப்பு...!

Tue Apr 2 , 2024
ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே. ரயில் பயணிகள் யுபிஐ பேமெண்ட் தளம் வழியாக விரைவான பதிலளிப்பு (க்யூஆர்) விரைவு பதிலைப் பயன்படுத்தி பொது டிக்கெட்டுகளை வாங்கலாம். பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்கும் முயற்சியில், இந்திய ரயில்வே பொது வகுப்பு ரயில் முன்பதிவுகளுக்கு UPI கட்டண முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதித்துள்ளது. ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் முன்பதிவு […]

You May Like