fbpx

1 – 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவ தேர்வு..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் பருவ தேர்வு நடைபெறவுள்ளது. என்னும் எழுத்தும் பாடத்திட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், பருவ தேர்வு வினாத்தாள்கள் எஸ்சிஇஆர்டி மூலமாக தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த முறை இணையதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனை பதிவிறக்கம் செய்து தேவையான அளவுக்கு பிரதிகள் எடுத்து தேர்வை நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒருபோதும் தேர்வு வினாத்தாள்களை வேறு பள்ளிகளுக்கு பகிரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாம் பருவ தேர்வு அட்டவணை மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான தேதிகள் அடங்கிய விவரங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

Chella

Next Post

மிக்ஜாம் புயல்..!! ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2,500 நிவாரணம்..!! முதல்வர் அறிவிப்பு..!!

Sat Dec 9 , 2023
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் கூறுகையில், “மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர் சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும், சீரான நிலை அடையும் […]

You May Like