பத்ரா சாவுல் நில மோசடி தொடர்பான முறைகேட்டில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்..
மும்பையில் பத்ரா சாவுல் நில மோசடி தொடர்பான முறைகேட்டில் சட்டவிரோத பணிப்பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதில் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத்துக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது.. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின்பே ஆஜராக முடியும் என்று கூறியிருந்தார்..
இந்நிலையில் இன்று காலை முதல் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.. இந்த சோதனைக்கு சிவ சேவா கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.. இந்த சூழல்ல் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரை அதிகாரிகள் அழைத்து செல்ல முயன்ற போதுஅங்கு கூடிய சிவசேனா தொடண்டர்கள் அவரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.. பாதுகாப்பு கருதி சஞ்சய் ராவத் இல்லத்தை சுற்றி ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்..
முன்னதாக, பத்ரா சாவுல் நில மோசடி வழக்கில் சஞ்சய் ராவுத்தின் உதவியாளர் பிரவீன் ராவத் தொடர்பான ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்துகளையும், சஞ்சய் ராவுத்தின் மனைவி வர்ஷாவுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளையும் அமலாக்க துறை பறிமுதல் செய்தது. பிரவின் ராவத் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.