fbpx

UPI மூலம் தவறான எண்ணுக்கு பணம் அனுப்பிவிட்டீர்களா?… திரும்ப பெற உடனே இதை செய்யுங்கள்!

டிஜிட்டல் சேவைகள் நம்முடைய வாழ்வில் இடம் பெற துவங்கிய பின்னால் நாம் யாருக்காவது உடனடியாக பணம் அனுப்ப வேண்டியது இருந்தால் நாம் நம்முடைய இருப்பிடத்தில் இருந்தே பணம் அனுப்பிக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். இன்றைய அறிவியல் உலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக மட்டுமின்றி பல கோடிக்கணக்கான மக்கள் தங்களின் பணத்தை அனுப்பவோ, பெறவோ வங்கிகளில் கால் கடுக்க காத்துக் கொண்டிருக்கும் நிற்கின்ற நேரத்தை வெகுவாக குறைத்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் யூபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு பெரும் பங்கு உண்டு. யூபிஐ என்பது தேசிய பரிவர்த்தனை கழகத்தால் (NPCI) நிர்வகிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் என்றால் பெரிய ஷாப்பிங் ஸ்டோர்கள், வணிக வளாகங்கள் மட்டுமல்லாமல், எளிய மளிகைக் கடைக் காரர்கள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், காய்கறி மற்றும் பழக்கடைகள் என பலதரப்பினரும் யூபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர்.

ஜிபே, யூ.பி.ஐ, ஆன்லைன் பேங்கிங், நெட் பேங்கிங் என அனைத்து அம்சங்களும் நம்முடைய வேலையை வெகுவாக குறைத்தாலும், மனிதர்களாகிய நாம் செய்யும் தவறு என்று ஒன்று இருக்கிறது. சில சமயங்களில் யாருக்காவது பணம் செலுத்த நினைத்து வங்கி கணக்கு எண்ணை மாற்றி பணம் அனுப்பி விடுவோம். சிறிய தொகையாக இருந்தால் பரவாயில்லை. அதிக பணமாக இருந்தால் என்ன செய்வது? இது போன்ற சங்கடங்களை தவிர்க்க இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நீங்கள் தவறான பரிவர்த்தனை மேற்கொண்டால், உடனே நீங்கள் பரிவர்த்தனை மேற்கொண்ட யுபிஐ செயலியில் புகார் கொடுக்கலாம். பின்பு தவறான பரிவர்த்தனையின் Screen shot எடுத்து, நீங்கள் பணத்தை மாற்றிய கூகுள் பே, போன்பே அல்லது UPI செயலிகளின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் Helpline-யில் குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்.

இதில் தீர்வு கிடைக்காதபட்சத்தில், RBI அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்கு சென்று, அதில் What we do tab என்ற பக்கத்திற்குச் சென்று, பின் UPIஐ தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பக்கத்தில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவர்த்தனைக் குறித்த விவரங்களை பதிவிட வேண்டும்.

எவற்றை கொடுக்க வேண்டும்? பணத்தை பெற மற்றொரு வழிமுறையும் உள்ளது. அதன்படி புகார் பெட்டியில், UPI பரிவர்த்தனை ID, வங்கியின் பெயர், virtual payment முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை திகதி, மின்னஞ்சல் ஜடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதைச் செய்தால் அடுத்த 24 – 48 மணிநேரத்தில் பணம் திரும்ப வரும்.

ஒருவேளை இதை செய்தும் பணம் வரவில்லை என்றால், நேரடியாக RBI பக்கத்தில் உள்ள புகார் தளத்தில் புகார் கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் தவறுதலாக அனுப்பிய பணத்தை, அடுத்த 48 மணிநேரத்திற்குள் திரும்பப் பெற்றுவிடலாம்.

Kokila

Next Post

மறக்கமுடியுமா அந்த துயரத்தை!… புல்வாமா தாக்குதல் 5 ஆண்டுகள் நிறைவு!… இந்தியாவின் பழிக்குப்பழி தாக்குதல்!

Wed Feb 14 , 2024
நாடு முழுவதும் இன்று காதலர் தினத்தை பலரும் கொண்டாடி வரும் அதே வேளையில், இந்தியாவின் கருப்பு நாளாகவும் இந்த பிப்ரவரி 14-ந் தேதி இருந்து வருகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது லெத்போரா. இங்கு கடந்த 2019ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். படைக்குச் சொந்தமான வாகனத்தில் நமது நாட்டின் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இந்த சாலையில் பாதுகாப்பு வாகனத்தில் சென்று […]

You May Like