fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்….! செந்தில் பாலாஜி தரப்பின் அடுத்த நடவடிக்கை என்ன…..?

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்க்கும் விதமாக, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆக்குணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்ற ஒரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது இல்லை என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினார் ஆகவே இந்த வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பு தான் இறுதியானது என்று இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 3வது நீதிபதியாக விசாரணை செய்த சிவி கார்த்திக் இந்த வழக்கை விசாரிக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சிவி கார்த்திகேயன் வந்து கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த விளக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட வரை அமலாக்க துறையினர் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி இல்லை என்று ஒருபோதும் தெரிவிக்கவில்லை. ஆகவே காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு அதிகாரம் இருக்கிறது என்று 3வது நீதிபதி கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

மேலும் தான் ஒரு குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்கு இருக்கிறது. ஆகவே அவர் மீதான விசாரணையை தடை செய்ய இயலாது மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டப்படியான நடைமுறைதான் என்று 3வது நீதிபதியான சி.வி கார்த்திகேயன் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

அதோடு செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்க துறையின் காவல் நாட்களாக எடுத்துக் கொள்ள இயலாது. செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிவடைந்ததும் அவரை அமலாக்குத்துரை காதலில் எடுத்து விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கே.வியட் மனு தாக்கல் செய்திருக்கிறது தங்களுடைய கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று அந்த மனுவில் அமலாக்கத்துறை வலியுறுத்தி இருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அமலாக்கத்துறை இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

Next Post

வெங்காயம், தக்காளியை தொடர்ந்து இதன் விலையும் அதிரடியாக உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Sat Jul 15 , 2023
நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை மட்டுமல்லாமல் தினசரி பயன்பாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு தொடக்கம் முதலே பருப்பின் விலை 10% உயர்த்தப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் 10% வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், […]

You May Like