தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார்.
அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை இந்த விவகாரத்தை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ஆளுநர் தற்போது அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறார்.