fbpx

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு…..! 2 மணி நேர விசாரணைக்கு பின் ஜூன் 27க்கு ஒத்திவைப்பு…..!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இந்த நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்க்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்து வழக்கை ஜூன் மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் செந்தில் பாதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரியும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு நடுவே செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கின்ற காலத்தை காவலாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தனி மனுவும் அமலாக்க துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆட்புணர்வு மனுவை விசாரணைக்கு உகந்ததல்ல என்று அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காததால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனவும், அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரமே கிடையாது எனவும், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ கூறினார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீண்ட நேரம் காரசார விவாதம் நடத்திய நிலையில், வாதத்துக்காக விசாரணையை தள்ளி வைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, ஜூன் மாதம் 27ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Post

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தகவலை கசியவிட்ட சுகாதார ஊழியரின் மகன்..!! தனது தாயும் உடந்தை..!! அதிர்ச்சி

Thu Jun 22 , 2023
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தரவுகளை கசியவிட்டதாக பீகாரில் சுகாதார ஊழியர் ஒருவரின் மகனை டெல்லி உளவு பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது. தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்பாக கையாளவும் யாரும் விடுபடாத வகையில் பணிகளை மேற்கொள்ளும் விதமாகவும் கோவின் (CoWIN) செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் ஆதார் எண், […]

You May Like