fbpx

துறை இல்லாத அமைச்சராக தொடர்கிறார் செந்தில்பாலாஜி….! அரசு இணையதளத்தில் செய்யப்பட்ட புதிய மாற்றம்…..!

தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயருக்கு கீழ் இருந்த துறைகள் நீக்கப்பட்டிருக்கிறது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றம் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து நிர்வாக காரணத்திற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்திற்கு கீழ இருந்த மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி உள்ளிட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் தமிழக அரசு இணையதளத்தில் செந்தில் பாலாஜியின் பெயருக்கு கீழே இருந்த துறைகள் நீக்கப்பட்டு வெறும் அமைச்சர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு நிதி அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த தங்கம் தென்னரசு பெயருக்கு மின்சார துறையும் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த முத்துசாமி பெயருக்கு கீழ் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் இணைக்கப்பட்டிருக்கிறது

Next Post

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில் சிறப்புகள்!

Mon Jun 19 , 2023
விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார் மற்றும் தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார்.108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித் தனியே சிறு ஆலயங்கள் […]

You May Like