fbpx

Senthil Balaji | செந்தில் பாலாஜிக்கு அடுத்த அதிர்ச்சி..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரிய மனுவில் மாநில காவல்துறையினர் தொடர்ந்த மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணை நிறுத்தி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது. செந்தில் பாலாஜியின் மனு மீது ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர் ரமேஷ் மற்றும் சுந்தரம் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன்பு அமலாக்கத்துறை விசாரணையை துவங்க முடியாது. அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் நிலையில், மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால், எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Read More : Google | ’இனி அதுக்கு வாய்ப்பே இல்ல’..!! கூகுள் நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் முக்கிய ஒப்பந்தம்..!!

Chella

Next Post

CM Stalin | 'தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து பொய்களை அவிழ்த்து விடும் பிரதமர்’..!! முக.ஸ்டாலின் காட்டம்..!!

Wed Mar 13 , 2024
தேர்தல் நேரத்தில் பொய்களை சொன்னால், அதை நம்ப தமிழ்நாட்டு மக்கள் என்ன ஏமாளிகளா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ”மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதே இத்தனை சாதனைகளை நம்மால் செய்ய முடிகிறது. ஒத்துழைப்பு கொடுக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால் […]

You May Like