தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிராத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதயத்தின் ரத்த நாளங்களில் மூன்று அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதோடு ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா கோரிக்கை வைத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், காவிரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இத்தகைய நிலையில்தான் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் 2️ அல்லது 3 நாட்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர் பரிந்துரை செய்திருப்பதாக. கூறினார்.
அதோடு எய்ம்ஸ் மருத்துவர்களும் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்யலாம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.