fbpx

34வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 34வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார். வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.அதன்படி செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அவருக்கு வங்கி தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது.

பின்னர், ஜாமீனில் விடுவிக்க கோரிய மனு மீது ஏப்ரல் 25ம் தேதி முதல் வாதங்களை தொடங்க செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read More: “போதை பொருள் விற்பனையை தடுக்க ஏன் நடவடிக்கை இல்லை” ; அண்ணாமலை ஆவேசம்!

Baskar

Next Post

இன்று சித்ரா பௌர்ணமி…! இப்படி வழிபாடு செய்து பாருங்க…!

Tue Apr 23 , 2024
சித்ரா பெளர்ணமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சித்ரா பெளர்ணமி என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் […]

You May Like