தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் தசரா விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.. அதன்படி அம்மாநிலத்தில் பதுகம்மா பண்டிகை செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 3 வரை கொண்டாடப்படும்.. அக்டோபர் 5 அன்று தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது… எனவே தெலுங்கானாவில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 வரை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. தசரா விடுமுறை கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு இருப்பதால், அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 10, 2 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் பண்டிகை தினத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டாலும், தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் இன்னும் சில விடுமுறைகள் வழங்கப்படலாம். இருப்பினும், இதை அந்தந்த அரசு அல்லது பள்ளிகளால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். எனவே, தசராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள அல்லது அறிவிக்கப்படாத பள்ளி விடுமுறைகள் குறித்த அறிவிப்புகளுக்கு அனைவரும் தங்கள் கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.