fbpx

தொடர் தாக்குதல்!. இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை நிறுத்திய பிரான்ஸ்!. அதிபர் மேக்ரான் அதிரடி!

France: போர் பதற்றம் நிலவிவரும் சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியுள்ளதாகவும், இதேபோல் மற்ற நாடுகளும் ஆயுதம் வழங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காசாவை தொடர்ந்து லெபனான், ஹவுதி படையினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை, பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.

இது குறித்து, அந்நாட்டு அதிபர மேக்ரான் கூறியதாவது, காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு தீர்வு காண வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்திவிட்டது. மற்ற நாடுகளும் ஆயுதம் வழங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும்.

போர் தொடர்ந்து நடப்பதை தடுப்பதே, இப்போது எங்களின் எண்ணம். தற்போது லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் மற்றொரு காசாவாக மாறக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார் . மேலும், பிரான்ஸ் பாதுகாப்பு துறை அறிக்கையின் படி, ‘கடந்த ஆண்டு மட்டும் 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பு உள்ள ஆயுதங்களை இஸ்ரேலுக்கு பிரான்ஸ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: உஷார்!. சீனப்பொருட்களை பயன்படுத்துகிறீர்களா?. நம் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் அதிர்ச்சி!

English Summary

Serial attack!. France has stopped supplying weapons to Israel! President Macron action!

Kokila

Next Post

உஷார்!. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம்!. அறிகுறிகள் இதோ!.

Sun Oct 6 , 2024
Meningitis: Infants, young kids at higher risk, vaccines may help, say experts

You May Like