fbpx

அரசு மருத்துவமனைகளில் தொடர் மரணம்..!! பொதுமக்கள் அச்சம்..!! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. வயிற்றுப் பகுதியை ஸ்கேன் எடுக்கக் கூறிய மருத்துவர், மருத்துவமனையில் அதற்கான ஊழியர்கள் இல்லாததால், ஸ்கேன் செய்யாமலேயே சிகிச்சையைத் தொடர்ந்ததாகவும், தவறான சிகிச்சையால் சிறுவன் இறந்துள்ளார் எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் நிகழ்வது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால், திமுக அரசோ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ, ஒரு நாள் செய்திதானே என்று இது குறித்து எந்த கவலையுமின்றி இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் எளிய மக்கள் மீது திமுக காட்டும் புறக்கணிப்பு, பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல தனியார் மருத்துவமனைகளை நடத்திக் கொண்டிருக்கும் திமுகவினருக்காக, திமுக அரசு இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தங்கள் ஒரே மகனை இழந்து வாடும் பெற்றோருக்காக, ஆழ்ந்த இரங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பல மரணங்கள் ஏற்பட்டும், அரசு மருத்துவமனைகளின் பிரச்சனைகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது..!! எச்சரிக்கும் அசாம் மாநில பாஜக முதல்வர்..!!

Thu Jan 25 , 2024
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை மணிப்பூரில் இருந்து அண்மையில் தொடங்கினார். அவரது யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் நுழைந்தது. அசாம் மாநிலத்தின் லக்கிம்பூரில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பாஜக தொண்டர்கள் […]

You May Like