டெல்லியில் பல பெண் குழந்தைகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி ரவீந்தருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. குற்றவாளி 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 30க்கும் அதிகமான குழந்தைகளை கடத்திச் சென்று கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணையின் போது டெல்லி, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் குற்ற செயல்களில் தான் ஈடுபட்டதை ரவீந்தர் ஒப்புக்கொண்டுள்ளார் 6 வருடங்களாக நடைபெற்ற கொடூர குற்றங்கள் குறித்து எட்டு வருடங்கள் நீடித்த விசாரணைக்கு பிறகு கடந்த சனிக்கிழமை அந்த குற்றவாளி குற்றவாளி தான் என்று அறிவிக்கப்பட்டார்.
ரவீந்தர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வருகிறார். அவர் போதை பொருளுக்கு அடிமையாகி, ஆபாச படங்களை பார்த்து குழந்தைகளை தேடி சென்று பாலியல் வன்கொடுமை செய்து அதன் பிறகு அவர்களை கொலை செய்து விடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். என்று சொல்லப்படுகிறது. கடந்த 2008 ஆம் வருடத்தில் இந்த கொடூரமான வழக்கத்தை தொடங்கிய போது அவருக்கு 18 வயது தான் அடுத்த 7 வருடங்களில் அவர் 30 குழந்தைகளுக்கு மேற்பட்டோர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார்.
கடந்த 2008 ஆம் வருடம் ரவீந்தர் உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்சியில் இருந்து டெல்லிக்கு வேலை தேடி வந்தார் அவருடைய தந்தை பிளம்பராக வேலைப்பார்த்து வந்தார். தாய் பல வீடுகளில் பணி பெண்ணாக வேலை பார்த்து வந்தார். டெல்லிக்கு வந்த சில தினங்களுக்குப் பிறகு ரவீந்தர் போதை பொருளுக்கு அடிமையாகி வீடியோ கேசட்டில் ஆபாச படத்தை பார்க்கத் தொடங்கினார் நாளடைவில் அதுவே அவருக்கு வழக்கம் ஆகிவிட்டது.
ரவீந்தர் நாள் முழுவதும் கூலி வேலையை செய்து விட்டு மாலையில் குடிபோதையில் இருப்பார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8:00 மணி முதல் நள்ளிரவு வரையில் சேரியில் உள்ள தன்னுடைய அறையில் உறங்கி விட்டு இரவில் குழந்தைகளை தேடி செல்வார் என்று கூறப்படுகிறது. ரவீந்தர் சில சமயங்களில் கட்டுமான தளங்கள் மற்றும் சேரிகளை சுற்றி 40 கிலோ மீட்டர்கள் வரையில் நடந்து சென்று தன்னுடைய வெறிக்கு இரையான பெண்களை தேடி உள்ளார்.
குழந்தைகளை கவரும் விதத்தில், 10 ரூபாய் நோட்டு சாக்லெட் உள்ளிட்டவற்றை கொடுத்து அவர்களை தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுவார் என்று கூறப்படுகிறது இவரால் 6 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.