fbpx

அமெரிக்காவில் உள்ள 80,000 இந்திய ஐடி ஊழியர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்..

கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் சமீபத்திய ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய ஐடி வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் இந்தியர்கள் அங்கு தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 200,000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30 முதல் 40 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.. அவர்களில் கணிசமானோர் H-1B மற்றும் L1 விசாவில் உள்ளனர். H-1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசா ஆகும்.. இந்த விசாவை வைத்திருப்போர் அமெரிக்காவின் நிரந்தர குடிமகன் அல்ல.. அங்கு வேலை செய்யும் வரை அமெரிக்க குடிமகனாக கருதப்படுவர்.. வேலை இல்லை எனில், அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்..

இந்நிலையில் தற்போது வேலை இழப்பை சந்தித்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் புதிய வேலை தேடி வருவதாக கூறப்படுகிறது.. மேலும் பல நிறுவனங்களும் ஒரே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் ஊழியர்கள் புதிய வேலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..

எனவே H-1B விசாவில் இருப்பவர்கள் தங்கள் வேலையை இழந்தால், இன்னும் 60 நாட்களுக்குள் புதிய வேலையைத் தேட வேண்டும், இல்லையெனில் வேறு வழியின்றி இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை… H-1B விசாவில் இருந்த மற்றொரு IT நிபுணரான சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து ஜனவரி 18 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் பேசிய போது “ நான் சிங்கிள் மதர்.. என் மகன் உயர்நிலைப் பள்ளி ஜூனியர் ஆண்டில் கல்லூரியில் சேரத் தயாராகி வருகிறான். இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது,” என்று கூறினார்.

சிலிக்கான் வேலியைச் சேர்ந்த தொழில்முனைவோரும் சமூகத் தலைவருமான அஜய் ஜெயின் பூட்டோரியா இதுகுறித்து பேசிய போது ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர்.. குறிப்பாக H-1B விசாவில் உள்ளவர்கள் கூடுதல் சவால்களை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் புதிய வேலையைக் கண்டுபிடித்து விசாவை மாற்ற வேண்டும். 60 நாட்கள் பணிநீக்கம் அல்லது நாட்டை விட்டு வெளியேறும் ஆபத்து உள்ளது.. இது குடும்பங்களுக்கு அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம், சொத்துக்கள் விற்பனை மற்றும் குழந்தைகளின் கல்விக்கு இடையூறுகள் உட்பட பல சிக்கல்கள் உள்ளது..” என்று கூறினார்.

உலகளாவிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் மற்றும் இந்தியா மற்றும் இந்திய புலம்பெயர் ஆய்வுகளுக்கான அறக்கட்டளை ஆகியவை வேலை இழந்த ஐடி நிபுணர்களுக்கு உதவ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.. இதனிடையே பணிநீக்கம் செய்யப்பட்ட இந்திய ஐடி ஊழியர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். ஒரு வாட்ஸ்அப் குழுவில், 800 க்கும் மேற்பட்ட வேலையற்ற இந்திய ஐடி ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் நாட்டில் தோன்றும் காலியிடங்கள் குறித்த தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.. எனினும் இது எந்தளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை..

Maha

Next Post

வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு...! Dec 2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு...! உடனே இதை புதுப்பிக்க வேண்டும்...!

Tue Jan 24 , 2023
லாக்கர் வசதிகளுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான நேரத்தை டிசம்பர் 2023 வரை நீட்டித்துள்ளது. ஆர்.பி.ஐ வங்கிகள் வழங்கும் தற்போதைய பாதுகாப்பான வைப்பு லாக்கர் வசதிகளுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான நேரத்தை டிசம்பர் 2023 வரை நீட்டித்துள்ளது. ஜூன் 30, 2023க்குள் 59% சதவீதம் மற்றும் செப்டம்பர் 30, 2023க்குள் 75 சதவீதம் காலக்கெடு படிப்படியாக நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டாம்ப் பேப்பர்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் திருத்தப்பட்ட […]

You May Like