fbpx

சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு… ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு…

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளது என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது. இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை அணுக தடையில்லை. இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Rupa

Next Post

Pregabalin | இந்த மாத்திரையை அதிகம் எடுத்தால் மரணம் நிச்சயம்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Mon Mar 25 , 2024
ப்ரீகாபலின் மாத்திரை (Pregabalin Tablet) வலிப்பு நோய், நரம்பு வலி மற்றும் பதற்றம் ஆகியவற்றை சரிசெய்ய பயன்படுகிறது. ஆனால், இந்த மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் பல நாடுகளில், ப்ரீகாபலின் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதை உட்கொள்பவர்கள் மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அளவாக எடுத்துக் கொண்டால் […]

You May Like