fbpx

டேட்டிங் செயலி மூலமாக பெண்களைப் போல பேசி ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கும்பல்…..! மும்பையில் அதிரடி கைது…..!

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நாளுக்கு நாள் மக்களுக்கு பல்வேறு விதமான துன்பங்களும், மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த விதத்தில், ஆண்களை குறி வைத்து மோசடி கும்பல் கடந்த சில வருடங்களாகவே மோசடி செய்து அதன் மூலமாக பணத்தை பறித்து வருகிறது. இத்தகைய நிலையில், லோகேண்டோ டேட்டிங் செயலின் மூலமாக பெண்களை போல பேசி கோவையைச் சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக கடந்த ஆண்டு சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இத்தகைய நிலையில் தான் அவர்கள் மும்பையில் இருந்து மோசடி செய்து வருகிறார்கள் என்பது காவல்துறையினரின் கவனத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, மும்பை விரைந்த தனிப்படை காவல்துறையினர், அங்கே முகாமிட்டு கண்காணிப்பு வந்தனர் மேலும் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பதுங்கி இருந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட எல்லோரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மும்பையில் இருந்தவாறு இணையதளத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படத்தை காட்டி மாற்ற இளைஞர்களின் ஆவணங்கள் வங்கி கணக்குகளை வைத்தும் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

மோசடி குறித்து அப்சல் கான்(24), காரணம் (24), தமிழரசன்(23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன்(25) விக்னேஷ் வீரமணி (25) பிரேம்குமார்(33) உள்ளிட்டோரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். காவல்துறையினர்.

மேலும் இவர்கள் locando வலைதளம் மூலமாக call girls and call boys available என விளம்பரம் செய்து அதனை பார்த்து அழைக்கும் இளைஞர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை தெரிவித்து அவர்களை ஏமாற்றி பல வங்கி கணக்கில் பணத்தை பெற்று மோசடி வேலையில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களை குறிவைத்து அங்கு விளம்பரங்களை செய்து அதன் மூலமாக தங்களுடைய மோசடி வேலைகளை நிகழ்த்தி வந்துள்ளனர். அத்துடன் தாங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக இந்த வேலைக்கு ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடமிருந்து அவர்களுடைய ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கிக் கணக்கு, மொபைல் எண்களை வாங்கி அதனை பயன்படுத்தி மோசடி வேலைகளை செய்திருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Post

ஐசிஏஆர் மற்றும் அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே மத்திய அரசு புதிய ஒப்பந்தம்....!

Mon Jun 12 , 2023
அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டான பலத்தையும், ஆற்றலையும் உருவாக்குவதற்காகவும் டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர் வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் […]
விவசாயிகளே 13-வது தவணை பணத்திற்காக வெயிட்டிங்கா..? இதை செய்தால் தான் பணம் வரும்..!!

You May Like