டெல்லியின் விவேக் விஹாரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர்.
மருத்துவமனை தீ விபத்து குறித்து இரவு 11.32 மணிக்கு அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், “இரவு 11.32 மணியளவில், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. மொத்தம் 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முழுவதுமாக அணைத்துவிட்டன. 2 கட்டிடங்கள் தீயில் எரிந்தன. ஒன்று மருத்துவமனை கட்டிடம். வலது பக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 2 தளங்களும் தீப்பிடித்து எரிந்தன. 11-12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்” என்றார்.
மேலும், டிஎஃப்எஸ் தலைவர் அதுல் கர்க் கூறுகையில், ”மீட்புப் பணி இன்னும் நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விவேக் விஹார் பகுதியின் ஐடிஐ, பிளாக் B க்கு அருகில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து தீயணைப்பு அழைப்பு வந்தது. மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன” என்று கூறினார்.
‘பணமழை பொழியும் IPL திருவிழா..’ இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?