fbpx

சென்னை வாசிகள் கவனத்திற்கு… இரவு 10 முதல் காலை 10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து…! தெற்கு ரயில்வே அறிவிப்பு…!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை புறநகர் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்குப் பதிலாக பின்வரும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். ஆனால் இந்த ரயில்கள் புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம், இந்துக் கல்லூரி, அண்ணனூர், திருமுல்லைவாயில், அம்பத்தூர், பட்டரவாக்கம் மற்றும் கொரட்டூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக மொத்தம் 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 10 மின்சார ரயில்கள் ஒரு சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

நேருக்கு நேர் மோதும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…! களைகட்டும் அரசியல் களம்.!

Sat Nov 18 , 2023
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர் கடந்த வருடம் ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. கடந்த வருடம் ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர்களுக்கு கட்சியின் கொடி கட்சியின் சின்னம் மற்றும் லெட்டர் பேட் […]

You May Like