fbpx

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்..!! லிஸ்டில் இடம்பிடித்த தமிழ்நாடு..!! மத்திய அரசின் அறிக்கையால் அதிர்ச்சி..!!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, தமிழ்நாடு, கேரளா உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக 2020ஆம் ஆண்டில் 3,71,503 குற்றங்கள் நடந்துள்ளது.

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்..!! லிஸ்டில் இடம்பிடித்த தமிழ்நாடு..!! மத்திய அரசின் அறிக்கையால் அதிர்ச்சி..!!

அதுவே 2021ஆம் ஆண்டில் 4,28,278 குற்றங்களாக அதிகரித்து உள்ளதாகவும், தமிழகத்தில் 2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 5,934-ஆக இருந்த நிலையில், 2020இல் 6,630 ஆகவும், 2021இல் மேலும் அதிகரித்து 8,501 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு விரைவு நீதிமன்றங்கள், 1023 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 389 போக்சோ நீதிமன்றங்கள் அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தீவிரமடையும் கனமழை! மீனவர்களை எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!

Thu Dec 15 , 2022
சமீபத்தில் வங்ககடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சேதங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், இந்த புயல் கடந்த 9ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. சென்னை மாமல்லபுரத்தில் நள்ளிரவு 2 மணியளவில் இந்த புயல் கரையை கடந்தது. ஆனாலும் புயல் கரையை கடந்த பின்னரும் ஓரிரு தினங்கள் தமிழகத்தில் மழை பெய்த […]
தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

You May Like