fbpx

பரபரப்பு… அதிகாலை நடந்த சம்பவம்…! பாலியல் குற்றவாளி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கைது…!

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 26-ம் தேதி அவரது தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3,000 வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌.

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இரவு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர். இதனிடையே, தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கர்நாடகா பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியும், ஜனதா தளம்-மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா இன்று ஜெர்மனியின் மியூனிச்சில் இருந்து நாடு திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் எஸ்ஐடி காவலர்களால் கைது செய்தனர். விமானம் முனிச்சில் இருந்து சுமார் 4.10 மணிக்கு புறப்பட்டது. (இந்திய நேரம்) மற்றும் அவர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சுமார் 1.10 மணியளவில் வந்தடைந்தார். கர்நாடக காவல்துறை அதிகாரிகள் அவர் வந்தவுடன் அவரை காவலில் எடுக்க விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

Vignesh

Next Post

செல்போன் பேசியபடி கார் ஓட்டி கைதான வழக்கில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்

Fri May 31 , 2024
செல்ஃபோன் பேசியபடி காரை ஓட்டி கைதான யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் பயணித்த யூடியூபர் டி.டி.எஃப் வாசன், மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே செல்லும் போது, செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டியுள்ளார். அஜாக்கிரதையாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டிய அவர், அதனை வீடியோவாக எடுத்து Twin Throttlers […]

You May Like