இளம் ஆண், பெண் இடையே பரஸ்பர புரிதல் இருந்தால், அதனை போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தாக்குதல் என கூற முடியாது என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மைனர் பெண் படித்து வந்துள்ளார். அவர் காணாமல் போனதை பள்ளி ஆசிரியை கவனித்ததை அடுத்து தாய் புகார் அளித்துள்ளார். சிறுமி தனது காதலனான உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் சிறுவன் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
இதன் விளைவாக, அவர் கைது செய்யப்பட்டு பத்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவருடன் தனக்கு உடல் ரீதியான உறவுகள் இருந்ததாகவும், சிறுமியின் சம்மதம் மற்றும் தனது சொந்த விருப்பத்திற்கு உட்பட்டு தான் உடலுறவு வைத்துக் கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் மனுவை விசாரித்து நீதிமன்றம் இதுபோன்ற சூழ்நிலைகளில், காதலனும் காதலியும் பரஸ்பர புரிதலோடு ஈடுபடும் போது, போக்சோ சட்டத்தை செயல்படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது, மட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்ட சிறார் மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.