fbpx

மாணவிகள் உள்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை..! அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வலைவீச்சு..!

கர்நாடகாவில் மாணவிகள் உட்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது அசாருதீன். இவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், முகமது அசாருதீன், தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முகமது அசாருதீன் தலைமைறைவாகி விட்டார்.

Karnataka-Police-searching-for-government-school-teacher-this-is-the-reason

மேலும் இவர், தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாணவ, மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆசிரியர் முகமது அசாருதீனை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை போலீசார் கைது செய்து உரிய விசாரணை நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கரடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முகமது அசாருதீனை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், பலரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Chella

Next Post

விஜயகாந்தின் உடல்நிலையில் தொய்வு..! பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி தகவல்..!

Sun Jul 3 , 2022
விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் […]
விஜயகாந்தின் உடல்நிலையில் தொய்வு..! பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு தகவல்..!

You May Like