குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் முக்கியமான ஒன்று என்றால் அது குழந்தைகளுக்கு நல்ல மற்றும் கெட்ட தொடுதல் (Good Touch, Bad Touch) பற்றி உங்கள் பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பது தான். இது அவர்களின் உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், கவனமாகவும், நம்பகமான நபர்களின் உதவியை பெறுவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே உங்கள் குழந்தைக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும்.
இந்நிலையில் தான், மாணவர்களின் நலன் கருதி வருகிற 26ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த கூட்டங்களில் பாலியல் தீங்குகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், குட் டச், பேட் டச் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்க வேண்டும். பிரசாரங்கள் வாயிலாக மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவ – மாணவிகளுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். அதேபோல், பாலியல் தொடர்பான புகாரளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.