அரசின் விண்வெளி தொழில் கொள்கை என்பது முதல்வர் முக.ஸ்டாலினின் குடும்பம் பயனடையவே உருவாக்கப்பட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மருமகன், விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு விண்வெளி தொழில்துறையின் கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டின் நிழல் முதல்வர் சபரீசன், 22.07.2024 அன்று இணைக்கப்பட்ட வானம் ஸ்பேஸ் எல்எல்பியின் பங்குதாரராக உள்ளார்.
இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தொழில்துறை கொள்கை, கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். முதலீடுகள் இல்லாததால் மாநிலம் தவித்து வருகிறது, நிதியாண்டு 25இல் புதிய முதலீடுகளுக்காக போராடி வருகிறது. ஒரு சர்வாதிகார அரசு, அவரது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒரு தொழில்துறை கொள்கையை வெளியிட்டுள்ளது.. அவமானம்” என்று பதிவிட்டுள்ளார்.
The Tamil Nadu Space Industrial Policy released yesterday was expected ever since TN CM Thiru @mkstalin’s son-in-law floated a space-tech startup. Thiru Sabareesan, the shadow CM of TN, is the designated partner of Vaanam Space LLP, incorporated on 22.07.2024.
— K.Annamalai (@annamalai_k) April 18, 2025
With this firm… pic.twitter.com/4OyZQYZP5T
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில், விண்வெளி துறையில் ரூ.10,000 கோடிக்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. இதன் மூலம் குறைந்தபட்சம் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.