ஐபிஎல் 16-வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையையும் சாம் கரன் படைத்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் ஏல சாதனையை முறியடித்த பிறகு, அவரது காதலியுடனான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவரது பெயர் இசபெல்லா சைமண்ட்ஸ் வில்மோட், 24 வயதாக இசபெல்லா லண்டனில் வசித்து வருகிறார். சமூக ஊடகங்களில் இசபெல்லாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சாம் கரன் தொடர்ந்து பகிர்ந்து வரும் நிலையில், இருவரின் புகைப்படங்களும் டிரெண்டிங்கில் உள்ளன.