கஞ்சா போதை தலைக்கேறி காதலி ஷ்ரத்தாவை கொலை செய்தேன் என்று அஃப்தாப் தெரிவித்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் வீசிய கொடூரமான காதலன் அஃப்தாப் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கஞ்சா பழக்கத்தை கைவிடுமாறு ஷ்ரத்தா கெஞ்சி கேட்டு கூட அதை விடவில்லை. ஒரு கட்டத்தில் இதன் காரணமாக இருவருக்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது நடந்த சம்பவத்தில் அப்படி செய்துவிட்டேன். நானாகா அவ்வாறு செய்யவில்லை போதையில் அப்படி செய்துவிட்டேன் என அஃப்தாப் விசாரணையில் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கஞ்சா போதைக்கு அடிமையான ஒரு நபர் தனக்கே தெரியாமல் கொலை செய்துவிட்டதாக போலீசிடம் தெரிவித்துள்ளார். மேலும் 35 துண்டுகளாக வெட்டிய பின்னர் எந்த சலசலப்பும் இன்றி பியர் அருந்திக் கொண்டிருந்துள்ளார். தொடர்ந்து சிகரெட் பிடித்ததாகவும் ஒரு பெண் இறந்துவிட்டாள் என்ற சிறு சலனம் கூட இன்றி நெட்பிலிக்சில் படம் பார்த்துள்ளார் அஃப்தாப் பூனாவாலா.
ஹோடெல் மேனேஜ்மென்ட் படித்து முடித்த அஃப்தாப் கறியை எப்படி வெட்டுவது என்பதை முன்னறே கற்றுவைத்திருக்கின்றார். ஷ்ரத்தா இறந்ததும் இதற்காகவே கறி வெட்டும் கத்தியை வாங்கி வந்து 10 மணி நேரம் துண்டு துண்டாக வெட்டி ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியே பாலித்தீன் பையில் கட்டிவைத்துள்ளார். இந்த பத்து மணி நேரத்தில்தான் சற்று ஓய்வெடுக்க பீர் குடித்ததும் சிகரெட் அடித்தது. பின்னர் உணவை சோமேட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளான்.
துர்நாற்றம் வீசுமே என்பதற்காக ஊதுபத்தி பொருத்தி வீடெங்கும் மணக்கவிட்டுள்ளான். சாப்பிராணி புகையை போடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கின்றான். அதுமட்டுமின்றி இணையளத்தில் கொலை செய்வது பற்றிய சில வீடியோக்களை பார்த்ததாகவும் ஏற்கனவே விசாரணையில் தெரியவந்துள்ளது. எதார்த்தமாக நடந்துவிட்டதாக அஃதாப் கூறும் இந்த சம்பவத்தில் திட்டமிட்டு செய்த வேலைகள் எப்படி சம்பவங்களுடன் ஒத்துப்போகின்றன. எனினும் முழு விவரங்கள் படிப்படியான விசாரணைக்குப் பின் தெரியவரும்.