fbpx

ஷாக்!… 2 மணிநேரத்தில் 16 பேர் பலி!… வெயில் காரணமாக வட இந்தியாவில் தொடரும் சோகம்!

Heat: வட இந்தியாவில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பீகாரில் உள்ள மருத்துவமனையில் 2 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. பீகார், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை வீசி வருகிறது. குறிப்பாக டெல்லியில் இதுவரை இல்லாத அளவில் 126 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அனல் தகித்ததன் காரணமாக அனைவரும் ஏ.சி.யை ஓடவிட்டதால் டெல்லியில் மின்சாரத்தின் தேவை 8,302 மெ.வாட் என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்தநிலையில் பீகாரில் உள்ள மருத்துவமனையில் 2 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் அவுரங்கபாத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த 16 பேர் அடுத்தடுத்து 2 மணிநேரத்தில் உயிரிழந்தனர். நேற்றைய தினம் பீகாரின் அவுரங்காபாத் நகரில் அதிகப்படியாக 48.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும், பீகாரில் இன்னும் ஒருவாரம் அதிகப்படியான வெயில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளநிலையில், பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பஅலை மற்றும் வெயில் காரணமாக மதிய வேளைகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: “இந்து-முஸ்லிம் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது!!” : நீதிமன்றம்

Kokila

Next Post

டாட்டூ போடுவதால் ஹெச்.ஐ.வி. பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்

Fri May 31 , 2024
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் கல்லீரல் அழற்சி, ஹெச்.ஐ.வி மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பச்சை குத்திக்கொள்வது நீண்ட காலமாக ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் ட்ரெண்டாகவும் இருந்து வருகிறது. நிறைய பேர் தங்கள் உடலில் சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் அர்த்தமுள்ள சின்னங்களால் அலங்கரிக்க பச்சை குத்துதலை தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், மருத்துவ நிபுணர்களின் சமீபத்திய எச்சரிக்கைகள், பச்சை குத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]

You May Like