fbpx

அதிர்ச்சி!… 2000 பேர் பலி!… 4 மடங்கு அதிகரித்த டெங்கு பரவல்!

Dengue: கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் 4 மடங்கு அதிகரித்துள்ள பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரை மிக எளிதாக பாதிக்கக் கூடிய டெங்கு, கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைப்பதில்லை.இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை.

எனவே இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.அதன்படி தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் அவர்களில் சுமார் 2000 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Readmore: உஷார்… நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நம்பர் பிளேட் கட்டுப்பாடு…!

Kokila

Next Post

ஆவின்... பேக் செய்யப்பட்ட மோர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு...!

Thu May 2 , 2024
2024 ஏப்ரலில் பேக் செய்யப்பட்ட மோர் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசு நடத்தும் ஆவின் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு, கரூர், திருப்புத்தூர் போன்ற பகுதிகளில் […]

You May Like