fbpx

Turtle curry: அதிர்ச்சி!… 9 குழந்தைகள் பலி!… 78 பேருக்கு உடல்நிலை பாதிப்பு!… ஆமைக்கறியை சாப்பிட்டதால் நிகழ்ந்த சோகம்!

Turtle curry: தான்சானியாவில் ஆமைக்கறி சாப்பிட்டதால் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 78 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தான்சானியவின் பெம்பா என்ற தீவில் சுவை மிகுந்த உணவு பதார்த்தமாக ஆமை இறைச்சி இருந்து வருகிறது. பெம்பா தீவு மக்கள் ஆமைக்கறி சாப்பிட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்கு சிலர் ஆமைக்கறியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனால் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறுகையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய் கிழமை (பிப் 5) இந்த சம்பவம் நடந்தபோதும், அதிகாரிகளுக்கு பயந்து இதுபற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. சம்பவத்தில், முதியவர்களில் 78 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதேசமயம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான்சானியாவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த மாபியா தீவில் வேணி கிராம பகுதியில், கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் வேணி கிராமத்தின் தலைவர் ஜுமா கதிபு கூறுகையில், மீனவர்களிடம் இருந்து கடல் ஆமை கறியை வாங்கி அவர்கள் சாப்பிட்டு உள்ளனர். அது விஷம் நிறைந்தது என சந்தேகிக்கப்படுவ்தாகவும் அவர் தெரிவித்திருந்தார். நச்சுத்தன்மை வாய்ந்த உணவை ஆமைகள் சாப்பிட்டதால், அதனை சாப்பிட்டவர்கள் விஷத்தின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக ஆமை பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Readmore:வெயிலில் அலட்சியம் வேண்டாம்!… உயிரை பறிக்கும் Heat stroke!… மருத்துவர்கள் எச்சரிக்கை!

Kokila

Next Post

PTK: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா...! மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்...!

Sun Mar 10 , 2024
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் அவர்களின் திடீர் ராஜினாமா ஏன்..? என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமாக அங்கமாக விளங்குவது நாடாளுமன்றத் தேர்தல் முறையாகும். நாடாளுமன்ற ஜனநாயக தேர்தல் நியாயமாகவும் நாணயமாகவும் பாரபட்சம் இல்லாமல் நடைபெற்றால் மட்டுமே ஜனநாயகம் தளைக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் சுயாதீனம் பெற்ற ஒரு தன்னாட்சியமைப்பாகும். […]

You May Like