Avin: தமிழகத்தில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் தினசரி சராசரி பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. ஆவின் பால் கொள்முதல் தினசரி சராசரி மூன்று லட்சம் லிட்டர் வரை சரிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
பிப்ரவரி மாதத்தில் தினசரி சராசரி 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நிலைமை மோசமாகி பால்கோவா ஐஸ்கிரீம் பால் சார்ந்த இனிப்புகள் போன்ற பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வெப்பத்தின் தாக்கம் காரணமாக கால்நடைகளின் பால் கறக்கும் திறன் குறைந்துள்ளது. தருமபுரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்ததால், பால் கொள்முதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், அட்டைதாரர்கள் மற்றும் சில்லரை நுகர்வோருக்கு பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே சரிவை ஈடுசெய்ய தயாராகிவிட்டோம். எங்களிடம் போதுமான பால் பவுடர் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.
Readmore: மஞ்சள் அலர்ட்…! அடுத்த 1 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!