Glaciers: புவி வெப்பமயமாதலால் காரணமாக, நீர்நிலைகளின் அளவு விரிவடைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள கிளாசியல் ஏரி எனப்படும் பனிப்பாறைகள் உருகுவதால் நீர்நிலைகளின் அளவு கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது 11 சதவீதம் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலே இதற்கு காரணம் என்றும், இது இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எப்போது வேண்டுமானால், ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் இமயமலை பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படும் என்றும் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போலவே அண்டை நாடான சீனாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பனிப்பாறைகள் மாறியுள்ளன. இந்தியாவில் உள்ள பனிப்பாறைகள் உருகியதால் நீர்நிலைகளின் அளவு கடந்த 13 ஆண்டுகளில் 11 சதவீதமாக உள்ள நிலையில், சீனாவில் 40 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.
இந்தியாவை காட்டிலும் சீனாவில் உள்ள ஏரிகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. 2 மிகப்பெரிய ஏரிகள் உள்பட 14 நீர்நிலைகள் 50 ஹெக்டேர் அளவுக்கு விரிவடைந்துள்ளன. புவி வெப்பமயமாதல் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
Readmore: 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு ரூ.10,000 பிளஸ் சான்றிதழ்…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்