fbpx

ஷாக் நியூஸ்..!! மக்களே 4 பேருக்கு பி.எஃப்.7 கொரோனா தொற்று உறுதி..!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் 4 பேருக்கு பி.எஃப்-7 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பி.எஃப். 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மேற்குவங்கத்தில் 4 பேருக்கு பி.எஃப்.7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று பாதித்தவர்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஷாக் நியூஸ்..!! மக்களே 4 பேருக்கு பி.எஃப்.7 கொரோனா தொற்று உறுதி..!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

BF.7 கொரோனா பாதிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாலும், அடுத்த 30-40 நாட்களில் இதன் பாதிப்பு இந்தியாவில் நிச்சயம் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்திருந்தது. பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தடுப்பூசி நிபுணர்கள் குழு இணைந்து கொரோனா தடுப்பூசிகளின் செயல்பாடுகளை மேப்பிங் முறையில் ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தது. மேலும் ‘சீனாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட யாருக்கும், ‘பி.எப்., 7’ கொரோனா தொற்று பாதிப்பில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்திருக்கிறார்.

Chella

Next Post

குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ஆசிரியர்..!! 500 அடி பள்ளத்திலிருந்து சடலமாக மீட்பு..!!

Thu Jan 5 , 2023
குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பள்ளி ஆசிரியர் ஒருவர் 500 அடி பள்ளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் வராந்தா காட் என்ற மலைக்குன்று தொடர் உள்ளது. காடு, அருவி, குளங்கள் என இப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழல் உள்ளன. எனவே, இங்கு பொழுதை ரம்யமாக கழிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், அம்மாநிலத்தின் நஸ்ராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் […]
குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ஆசிரியர்..!! 500 அடி பள்ளத்திலிருந்து சடலமாக மீட்பு..!!

You May Like