எஸ்பிஐ வங்கி கடன் விகிதங்களை உயர்த்தி உள்ளதால் வீடு, வாகனக் கடன்களுக்கான இ.எம்.ஐ தொகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, கடன் விகிதங்களை 0.5% வரை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அதன் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த நடவடிக்கை வந்துள்ளது. புதிய விகிதங்கள் ஆகஸ்ட் 15 முதல் பொருந்தும் என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது..
பெரும்பாலான கடன்கள் ஒரு வருடத்திற்கான MCLR விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. வட்டி விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக, MCLR, EBLR அல்லது RLLR மூலம் கடன் வாங்கியவர்கள், மாதாந்திர கட்டணத்தில் கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. அதாவது வீட்டுக்கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான இ.எம்.ஐ தொகை அதிகரிக்கூடும்..