அரசு டாஸ்மாக்கின் கீழ் தமிழகத்தில் மதுபான விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் நடத்தக்க வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருக்க தான் செய்கிறது. மேலும் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை எங்கும் அமைக்காது என்றும், கடைகளுக்கான இடம் மாறுதல் மட்டுமே செய்யப்படும் என்றும், டாஸ்மாக் திறக்கும் நேரத்தை குறைப்பதாகவும் கூறியது. அதன்படி காலை 11 மணி முதல் இரவு10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது
இந்நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மது விற்பனை நேரத்தை இனி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழக அரசு மாற்றுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கான பதிலினை தமிழக அரசு விரைவில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கை டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.