fbpx

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..!

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் டாஸ்மாக் நிறுவனம், 4,820 சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த கடைகளுக்கு ஆண்டுக்கு எட்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்டுகிறது. அதன்படி, உழைப்பளர் தினத்தை முன்னிட்டு நாளை (மே 1-ம் தேதி) அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3 (ஏ), எப்எல்3 (ஏஏ) மற்றும் எப்எல்11உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விடுமுறை தினமான நாளை மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதே போல், தனியார் மதுக்கூடங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

அதிக வாகன சத்தத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

Tue Apr 30 , 2024
வாகன சத்தத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான மக்கள் கார் சத்தம் ஒரு எரிச்சலூட்டும் என்று கருதுகின்றனர். ஹார்ன் சத்தமாக இருந்தாலும், பிரேக்குகள் சத்தமாக இருந்தாலும், இன்ஜின் சத்தமாக இருந்தாலும், கார் போன்ற மற்ற வாகனங்கள் சத்தம் தொல்லை தருவதாக அமைந்துள்ளது. இதனால் குறிப்பாக நெரிசலான நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கடுமையான பாதிக்கப்படுகின்றனர். மேலும், சமீபத்திய ஆய்வின்படி, வாகன சத்தம் […]

You May Like