முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை, ரத்து செய்வதற்கான விதியை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது.. இதனால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்..
விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில், ரயில்வே டிக்கெட்டுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. ரயிலில் தங்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்த, மக்கள் பொதுவாக முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்குவார்கள். ஆனால் எதிர்பாராத அவசரநிலை அல்லது திட்டங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நிறைய பேர் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆம்.. டிக்கெட் ரத்து கட்டணத்திற்கான விதியை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது..
மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய இனி கூடுதல் செலவாகும்.. ஏனெனில் ரத்து செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.. முதல் வகுப்பு அல்லது ஏசி கோச் டிக்கெட் ரத்து கட்டணம் 5% ஜிஎஸ்டிக்கு உட்பட்டது, இது டிக்கெட்டில் மதிப்பிடப்பட்ட கட்டணமாகும். உங்கள் ஹோட்டல் அல்லது விமான முன்பதிவுகளை நீங்கள் ரத்து செய்ய வேண்டியிருந்தால், இதே காரணம் பொருந்தும், இந்தச் சந்தர்ப்பத்தில் ரத்து செய்வதற்கான கட்டணம் முதன்மை சேவையின் அதே ஜிஎஸ்டி விகிதத்திற்கு உட்பட்டது.. எடுத்துக்காட்டாக, முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்புகளில் எடுக்கப்படும் டிக்கெட்டுகள் 5% ஜிஎஸ்டிக்கு உட்பட்டவை; எனவே, ரத்து செய்யப்படும் டிக்கெட்களும் அதே சதவீதத்தில் ஜிஎஸ்டிக்கு உட்பட்டது..
ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ஏசி முதல் வகுப்பு அல்லது ஏசி எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்ய இந்திய ரயில்வே 240 வசூலிக்கிறது. ரயில் புறப்படும் 48 முதல் 12 மணி நேரத்திற்குள் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் விலையில் 25% ரத்துக் கட்டணமாக விதிக்கப்படும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.