fbpx

அதிர்ச்சி: தமிழகத்தில் பரவியது ஓமைக்ரான் புதிய வைரஸ்!!

தமிழகத்தில் மட்டும் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரானின் புதிய வடிவம் எக்ஸ்.பி.பி. என்ற வைரஸ் 175 பேரை பாதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் ஓமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி. என்ற வைரஸ் பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு ஓமைக்ரான் மாறுபாடு பற்றி எக்ஸ்.பி.பி. வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் எக்ஸ்.பி.பி. வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 175 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வங்காளத்தில் 103 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். நாடு முழுவதும் 380 பேர் பாதிககப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இந்த வகை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அது போன்ற எந்த ஒரு வைரசும் கண்டறியப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பதாகவும் வைரஸ்களின் உருமாற்றம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாவும் தெரிவித்துள்ளது.

Next Post

இன்றுடன் தமிழ் சினிமாவுக்கு 91 வயதாகின்றது!!

Mon Oct 31 , 2022
தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் ’காளிதாஸ்’ வெளியாகி இன்றுடன் 91 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இந்தப்படத்தை தற்போது பார்க்க முடியாது என்பது சற்றே வருத்தப்பட வைக்கின்றது. தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான ’காளிதாஸ்’ 1931ம் ஆண்டு அக்டோபர் 31ல் இதே நாளில் வெளியானது. 91 ஆண்டுகளை கடந்துவிட்ட இத்திரைப்படத்தை தயாரிக்க ரூ.8000 செலவாகியுள்ளது. ஆனால், இத்திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனம் பெற்ற லாபம் ரூ.75,000 ஆகும். முதல் பேசும் படத்தில் 50 […]

You May Like