fbpx

ஷாக்.. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வரும் நாட்களில் மின்வெட்டு அதிகரிக்கும்.. ஏன் தெரியுமா..?

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கியை செலுத்தாததற்காக ஸ்பாட் மார்க்கெட்டில் மின்சாரம் வாங்க/விற்பதற்கு ஒரு யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு தடை விதிக்கபபட்டுள்ளது..

ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜம்மு மற்றும் காஷ்மீர், ராஜஸ்தான், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்கள் மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கிரிட் ஆபரேட்டரான Power System Operation Cooperation (POSOCO) மூலம் தடை செய்யப்பட்ட மாநிலங்கள் ஆகும்.. இதனால் இந்த மாநிலங்கள் பெரும் மின்வெட்டுகளை எதிர்நோக்கி உள்ளன.

மத்திய அரசுக்கு மாநில மின்சார வாரியங்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 5,000 கோடி பாக்கி வைத்துள்ளன, அதிகபட்சமாக தெலுங்கானாவில் ரூ.1,380 கோடி உள்ளது. கடன் தொகை நிலுவையில் உள்ள இந்த மாநிலங்களுக்கு 27 விநியோக நிறுவனங்களின் மின்சார வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய எரிசக்தி பரிமாற்றம் (IEX), பவர் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (PXI) மற்றும் இந்துஸ்தான் பவர் எக்ஸ்சேஞ்ச் (HPX) ஆகியவற்றை POSOCO கேட்டுள்ளது

இதன் மூலம் மேற்கூறிய மாநிலங்கள் ஸ்பாட் மார்க்கெட்டில் இருந்து கூடுதல் மின்சாரத்தை வாங்க முடியாது, அதே நேரத்தில் மத்திய அரசு உடனான நீண்ட கால ஒப்பந்தங்களின் விநியோகம் தொடரும். எனினும் இதே நிலை தொடர்ந்தால் நீண்ட கால விநியோகத்தையும் மத்திய அரசு கட்டுப்படுத்தலாம். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் மின் வெட்டு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது..

குறுகிய கால மாற்று ஆதாரங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதைத் தடுப்பதன் மூலம் மாநில அரசுகளின் மின்சார வாரியத்திற்கு அபராதம் விதிக்க, மின்சாரம் விதிகள், 2022ஐ மத்திய அரசு பயன்படுத்தியது இதுவே முதல் முறை. இந்த ஆண்டு ஜூன் மாதம் வகுக்கப்பட்ட விதிகளின்படி, செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் நிலுவைத் தொகையில் தாமதமாக செலுத்தும் கூடுதல் கட்டணத்திற்கு மாநில மின்சார வாரியங்கள் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

”திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை”..! அண்ணாமலை குற்றச்சாட்டு..!

Fri Aug 19 , 2022
திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சர்வாதிகாரத்தினாலே புது கோட்டையை கட்டலாம் என்ற தமிழக முதல்வரின் மனக் கோட்டையைத் தகர்க்கக் கூடிய மக்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை. சர்வாதிகாரத்திற்கு எல்லை இல்லை. முன்னேற்றத்திற்கு வழி இல்லை என்ற தமிழகத்தின் நிலையை உணர்ந்து, ஊழலற்ற உன்னத […]

You May Like