fbpx

ஷாக்!… கங்கனாவை அறைந்த பெண் காவலர் கைது!

Kangana Ranawat: விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதாக நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தின் மாண்டி தொகுதி பா.ஜ.க-வின் புதிய எம்.பி ரனாவத் , நேற்று முன் தினம் மாலை சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் அவரை சோதித்தார். பின்னர் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் கங்கனாவை குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத கங்கனா நிலைகுலைந்து போனார்.

இந்த நிலையில், கங்கனாவைத் தாக்கிய மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்துகொண்டிருந்தபோது அதில் எனது அம்மாவும் இருந்தார். அப்போது இந்த கங்கனா ரனாவத் `போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் 100 ரூபாய்க்காக அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள்’ எனக் கூறி, தொடர்ந்து விவசாயிகளை அவமரியாதை செய்துவந்தார். அதற்காகதான் நான் அவரை அடித்தேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று விவசாய சட்டங்களை எதித்து 2020-ம் ஆண்டு டெல்லியில் விவசாயிகள் போராடி வந்தனர். அந்த போராட்டத்தின்போது, கங்கனா ரனாவத் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தார்.

அதே சமயம் பெண் காவலர் தன்னை அறைந்தது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் கங்கனா ரனாவத் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுரை தொழில் பாதுகாப்புப்படை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் தற்போது பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Readmore: சற்றுமுன் வெளியான அறிவிப்பு…! ஜூன் 17-ம் தேதி பொது விடுமுறை…!

English Summary

Policewoman Kulwinder Kaur has been arrested for slapping actress and BJP MP Kangana Ranaut on the cheek.

Kokila

Next Post

Manjolai | மனம் மயக்கும் மாஞ்சோலை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க ஒரு ரவுண்டு போகலாம்..!!

Sat Jun 8 , 2024
In summer, most of us visit Ooty and Kodaikanal, focusing on these two towns. But it is only after getting there that the centers are overrun with tourists from the accommodation.

You May Like