கள்ளத்தொடர்பு ஒரு குடும்பத்தில் உருவாக்கும் பிரச்சினை, கணவன்-மனைவி இடையேயான நம்பிக்கையை மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்ப உறவுகளையும் பாதிக்கும். சந்தேகம், கருத்து வேறுபாடு, தொடர் தகராறு என பிரச்சினைகள் தீவிரமடையும் நிலையில், சில சம்பவங்கள் எதிர்பாராத விபரீதங்களிலும் முடிகின்றன. குறிப்பாக, திருமண வாழ்க்கையில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகள் குழந்தைகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்துக்குள் நீடிக்கும் கருத்து மோதல்கள் சில நேரங்களில் சட்டரீதியான பிரச்சினையாகவும் மாறுகின்றன. அப்படியொரு சம்பவம் தான் புதுக்கோட்டை […]

தனியாக பயணம் செய்யும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. கனமழைக்கு மத்தியில் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆம்னி பேருந்தில் லிஃப்ட் கேட்ட 16 வயது சிறுமியை, அதில் இருந்த இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமி, […]

டெல்லி பவானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது நர்சரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த புகாரில், அதே பள்ளியில் கேப் டிரைவராக பணியாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை சாக்லேட் கொடுத்து ஆசைவார்த்தை கூறி, பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக மாற்றம் ஏற்பட்டதை அவரது தாய் கவனித்துள்ளார். இதையடுத்து, குழந்தையிடம் அன்பாக விசாரித்தபோது, […]

ராஜஸ்தானில் கணவருடனான திருமண வாழ்க்கைக்கு இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த 27 வயதான மகேஷ், கவிதா மீனா (23) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, […]

சுதந்திர தினத்துக்கு முன்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஷெசாத் பட்டி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை தொடர்புகொண்டு, அவர்களை தனது குழுவில் இணைத்து வந்துள்ளார். வெளிநாடுகளில் வசித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தன்னை […]

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக உருவான பிரச்சினை கொலையில் முடிந்துள்ளது. தோட்டத்தில் தங்கியிருந்த கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உறவினரான 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராமச்சந்திரன் (45) என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஏற்கெனவே நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள […]

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.. செப்டம்பர் 2023 இல், அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, ​​பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றது குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், அவர் காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.. மேலும், அவர் கொழும்பு கோட்டை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.. இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் “நாங்கள் அவரை கொழும்பு […]